ஒரத்தநாடு, மே 5-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒரத்தநாடு கிளை சார்பில், நம்ம ஊர் மக்கள் ஆட்சி யர் ஆர்.எஸ்.மலையப்பன் நினைவு கலை இலக்கிய இரவு நேரு வீதி எழுத்துக்காரத் தெருவில் சனிக்கிழமை மாலை 5 மணி தொடங்கி நடைபெற உள்ளது.
நிகழ்வில், தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், தமுஎகச மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும், பாராட்டு விழா, கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், மண்ணிசைப்பாடல் கள், நாடகம், கதை சொல்லல், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை தமுஎகச மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.