districts

img

சிறுகமணி பேரூராட்சி மக்களுக்கு வேலை வழங்க வி.தொ.ச கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 28-

     சிறுகமணி பேரூராட்சி மக்களுக்கு வேலை  வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சிறுக மணி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில்  வெள்ளியன்று சிறுகமணி பேரூராட்சி அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு சங்க ஒன்றிய தலை வர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செய லாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் தங்க துரை, மாவட்ட துணைத்தலைவர் செல்வ ராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணா,  மாவட்ட பொருளாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஜோதிமுருகன், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.