districts

திருவாரூர் வண்டாம் பாளை லயன்ஸ் கண் சிகிச்சை முகாம்

பாபநாசம், மே 2- தஞ்சாவூர் மாவட்ம் பாபநாசம் ரோட்டரிச் சங்கம்- உத்த மதானபுரம் ஊராட்சி மன்றம்-திருவாரூர் வண்டாம் பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை- மாவட்ட பார்வை  இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை  முகாமை பாபநாசம் அருகே  உத்தமதானபுரம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடத்தின. முகாமை உத்தம தானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன்  துவக்கி வைத்தார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு ஆலோசனைகளை மருத்துவக்குழுவினர் வழங்கினர். முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் அறி வழகன், செயலர் சிலம்பரசன், முருகானந்தம், ஆனந்தன், செல்வக்குமார், ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.