திருநெல்வேலி, ஏப். 25- திருநெல்வேலி - தென்காசி வழித்தடத் தில் உள்ள இரயில் நிலையங்களின் வரு மானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை யின் படி ( ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2024 வரை ) மதுரை கோட்டத்தில் முதல் 50 இடங்களை பிடித்து உள்ள இரயில் நிலை யங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.215 கோடி வருமானத்தைக் கொடுத்து மதுரை ரயில் நிலையம் முதலிடம்,திரு நெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ரூ.130 கோடி - இரண்டாம் இடம், அம்பாசமுத் திரம் - 2 கோடி 80 லட்சம் வருமானத்தோடு 26ஆவது இடத்தை பிடித்து உள்ளது. கல்லிடைக்குறிச்சி (KIC)-ரூ. 87 லட்சம் வருமானத்தோடு 44ஆவது இடத்தை பிடித்து உள்ளது,பாவூர்சத்திரம் (PCM) - ரூ.85 லட்சம் வருமானத்தோடு 45ஆவது இடத்தை பிடித்து உள்ளது. சேரன்மகாதேவி (SMD) ரூ. 66 லட்சம் வருமானத்தோடு 48ஆவது இடத்தை பிடித்து உள்ளது. மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 இரயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட திருநெல் வேலி - தென்காசி வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளு க்கு மேலாகியும் தற்போது வரை இந்த வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி ரயில் இல்லை. அத்துடன் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில் வசதி கிடை யாது. இருப்பினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்கள் மதுரை கோட்டத்தின் முதல் 50 இடத்தி ற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.