districts

திருச்சி முக்கிய செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

பாபநாசம், மே 8 - திருவாரூர் மாவட்டம் வலங் கைமான் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண்  மருத்துவமனை மற்றும் திருவா ரூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.  வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த முகாமை சாசனத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவக் குழுவினர் 260 பேரை பரிசோதனை மேற் கொண்டதில், 41 பேருக்கு கண்ணில் புரை முற்றிய நிலை யில் இருப்பது கண்டறியப்பட் டது. அவர்கள் அறுவை சிகிச்சை  மேற்கொள்ள பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதில் ரோட்டரி சங்கத் தலைவர் அருள் முருகன், செய லாளர் ரவிச்சந்திரன், பொருளா ளர் மாணிக்கவேலு, திட்டத் தலை வர் அன்பு பிரபு, துணைத் தலை வர்கள் ராஜராஜ சோழன், மோ கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தண்ணீர் பந்தல் திறப்பு

பாபநாசம், மே 8 - பாபநாசம் பெனிபிட் பண்ட்  லிட், திருச்சி சக்சஸ் டிரஸ்ட் இணைந்து கோடைக் கால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச் சியை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் சக்சஸ் டிரஸ்ட் டிரஸ்டி விக்டர், கும்பகோணம் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி ராஜு  சுந்தரம், கும்பகோணம் பெனிபிட்  பண்ட் சேர்மன் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பொதுமக்களுக்கு நீர்  மோர், தர்ப்பூசணி வழங்கப்பட்டது.

சிபிஎம் உறுப்பினர்  அட்டை வழங்கல்

திருவாரூர், மே 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகர உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கும் மே தின சிறப்பு பேரவை திருவாரூ ரில் புதன்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு கட்சியின் திரு வாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கட்சி உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கி அரசியல் விளக்க உரை யாற்றினார். முன்னதாக மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி.கோ மதி, கே.ஜி.ரகுராமன் ஆகியோர்  உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகரச் செயலாளர் எம்.தர்ம லிங்கம் கலந்து கொண்டனர்.  நீடாமங்கலம் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் சிறப்பு பேர வைக்கு, நீடாமங்கலம் ஒன்றி யச் செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பி னர் அட்டை வழங்கி அரசியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மாவட்டக் குழு  உறுப்பினர் ஆர்.சுமதி ஆகியோர்  உரையாற்றினர்.

பிளஸ் 2 தேர்வு: மாநில அளவில்  கரூர் மாவட்டம் 12 ஆவது இடம்

கரூர், மே 8 - பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை  வெளியாயின. இதில் கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 4,021 பேரும், மாணவிகள் 5,065 பேரும் என மொத்தம் 9,086  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 95.90. மேலும் தேர்வு  எழுதியதில் மாணவர்கள் 94.08 சதவீதமும், மாணவிகள் 97.40 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அரசுப் பள்ளிகள் 90.31 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.73 சதவீத மும் தேர்ச்சி பெற்றுள்ளன. 30 தனியார் பள்ளிகள், 8 அரசு பள்ளிகள் மற்றும் 3 அரசு உதவிபெறும் பள்ளிகள் என  41 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.  கடந்த ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 17  ஆவது இடத்தில் இருந்த கரூர் மாவட்டம், இந்தாண்டு 12  ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இளைஞர் கொலை: 3 பேர் கைது

தஞ்சாவூர், மே 8 - தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள சானூரப் பட்டியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (27). இவர் தனது உறவினர்  சுரேந்தர் (23) உள்பட 2 பேருடன் தஞ்சாவூர் புதிய பேருந்து  நிலையம் எதிரே ஆரோக்கிய நகரிலுள்ள மதுபானக் கூடம்  மூடப்பட்ட நிலையில், அருகேயுள்ள இடத்தில் திங்கள்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 இளைஞர்கள் இவர்களிடம் மது பானம் விலைக்கு கேட்டனர். இதைத்தொடர்ந்து, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டன. இதில், தாக்கப்பட்ட ஹரிஹரன் நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிந்து, தஞ்சாவூர் கீழவாசல் சுராஜ் நகரைச்  சேர்ந்த அன்சாரி (26), தெற்கு அலங்கம் யோகி லட்சுமி நாயக்கன்  தெருவைச் சேர்ந்த முகேஷ் (21), திருவையாறு ஹாஜா  மைதீன் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரன் (28) ஆகியோரை  செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் இன்று ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டல் நிகழ்ச்சி

பெரம்பலூர், மே 8 - பெரம்பலூர் மாவட்டத் தில் 12 ஆம் வகுப்பு பயின்று  தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழ னன்று காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை தன லட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட ரங்கில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி  பெற்ற மாணவ, மாணவி களுக்கு பல்வேறு துறை களில் உயர்கல்வி படிப்பு  சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான விவ ரங்கள் குறித்த வழிகாட்டு தல் அரங்குகள் இடம்பெ றுகின்றன. மேலும் பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சி யில் பங்கேற்று தங்களது  கல்லூரிகளில் மாணவ-மாண வியர்கள் மேற்படிப்பை, விருப்பமுள்ள பாடங்களை தேர்ந்தெடுத்து பயில்வ தற்கான வழிகாட்டல் அரங்கு கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன.  அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வினை எதிர் கொள்வது குறித்தும் போட்டி தேர்வின் முக்கியத்து வம் குறித்தும் அரசுத் துறை  சார்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர். உயர்கல்வி பயில் வதற்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் இணையதளம் மூலம் விண் ணப்பிப்பதற்கான விழிப்பு ணர்வு குறித்த கூட்ட அரங் குகளும் இடம்பெறுகின்றன.  இந்நிகழ்ச்சியில் பங்கேற் கும் வகையில், மாவட்டத் தில் அனைத்து இடத்திலிருந் தும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர பேருந்து  வசதியும், மதிய உணவு வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே அனைத்து மாணவ-மாணவிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர்  க.கற்பகம் தெரிவித்து உள்ளார்.

குடிநீர் தொடர்பான புகார்கள் மீது  உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரியலூர், மே 8- குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் ராய் உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில், கோடை வெப்ப அலை பாதிப்பு களை தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்  வழங்குவது குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணி கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா முன்னிலை யில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவ லர் அருண்ராய், “குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள்  மற்றும் செய்திகளின் மீது தனிக் கவனம் செலுத்தி, அப்பகுதி களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலை யத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டி, பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்  துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி  ஏரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கிணறு போன்ற பணிகளை  ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர்  மாது, வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:  குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, மே 8 - புதுக்கோட்டை அருகே இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே சோதிரி யன்காட்டைச் சேர்ந்தவர் நல்லதம்பி (45). இவர் கடந்த 2021  மே 6 ஆம் தேதி இரண்டரை வயது சிறுமியை தனது வீட்டுக் குள் தூக்கிச் சென்று கதவை அடைத்துக் கொண்டு பாலியல்  தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கீரனூர்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ்  வழக்குப் பதிவு செய்த போலீசார், நல்லதம்பியைக் கைது  செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில்,  நீதிபதி எஸ்.ஜெயந்தி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகளின்கீழ் தலா 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனையும், தலா ரூபாய் ஆயிரம் அபராதமும், வீட்டுக்குள் அடைத்து வைத்த குற்றத்துக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து, சிறைத் தண்டனை காலங்களை  ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடாக அரசு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

உயர்கல்வி வழிகாட்டல்  குழு அமைக்க பயிற்சி

அரியலூர், மே 8- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில், ஒருங்கி ணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டல் குழு  அமைத்தல் மற்றும் உயர் கல்வி வழிகாட்டல் குழு  உறுப்பினர்களின் பணிகள் குறித்து வட்டார அளவிலான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை  வகித்து, உறுப்பினர்களுக்கு உயர்கல்வி பற்றிய கருத்து களை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் பெ.ஆசைத் தம்பி, ந.சத்தியபாமா, கி.அகிலா, க.உத்திராபதி ஆகி யோர் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.  பயிற்சியில் ஆண்டிமடம் ஒன்றியத்திலுள்ள அரசு  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்கள், எஸ்எம்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், கல்வியாளர்கள், ஐடிகே தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்  பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சாலையோரம் நின்ற லாரி மீது  கார் மோதல்: 4 பேர் பலி

அரியலூர், மே 8 - திருமானூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார்  மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரி ழந்தனர். தஞ்சாவூர் மேலவீதியைச் சேர்ந்த ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(19), செல்வா(17), கரந்தட்டாங் குடியைச் சேர்ந்த சண்முகம்(23) ஆகிய 4 பேரும் பெரம்ப லூரில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு  செவ்வாய்க்கிழமை மாலை காரில் ஊருக்கு திரும்பினர். அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக் குறிச்சி பிரிவு சாலை அருகே வந்த போது, அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி ஏற்றிக் கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் வேகமாக மோதியுள்ளது. இதில், காரில்  பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமானூர்  காவல் துறையினர், பொக்லைன் இயந்திரம் மற்றும்  பொதுமக்கள் உதவியுடன் சடலங்களை மீட்டு, தஞ்சாவூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தினை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ச.செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கொலை செய்யப்பட்டவரின்  குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக! தமிமுன் அன்சாரி கோரிக்கை

அறந்தாங்கி, மே 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபா லப்பட்டினத்தில் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது அவர், கொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். நைனா முகமது கொலை வழக்கில்,  எவ்வித குறுக்கீடுகளுக்கும் திசை திருப்பு முயற்சி களுக்கும் இடமளிக்காமல் சட்டம் தன் கடமையைச் செய்ய  வேண்டும் என்று கூறினார். இச்சந்திப்பின் போது மாநில துணைச் செயலா ளர்கள் அப்துல் சலாம், ஹாரிஸ், மனித உரிமை பாது காப்பு அணி மாநிலச் செயலாளர் முனைவர் முபாரக் அலி,  மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது, மாவட்டப் பொருளாளர் சையது அபுதாஹிர் உட்பட மாவட்ட, நகர,  ஒன்றிய, கிளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

நிலக்கடலை பயிர் ஊக்கி  செயல் விளக்கப் பணி

தஞ்சாவூர், மே 8-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள  அணைக்காடு கிராமத்தில், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண் மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதனொரு பகுதியாக அணைக்காடு கிராமத்தில், மாணவிகள் செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்கிராமத்தில் உள்ள விவசாயிகள் தென்னையில் ஊடு பயிராக நிலக்கடலையினை விதைத்துள்ளனர். இதில், திரட்சியில்லாத பொக்கு கடலைகள் அதிகளவு உருவா கின்றன. அதனை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலக்கடலை ரிச் எனப்படும் பயிர் ஊக்கியை உப யோகிக்கலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தனர்.  மேலும் அதனைப் பயன்படுத்தும் முறை பற்றியும், வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கி னர். அதனை பயன்படுத்துவதால் பயிர் ஊக்கம் பெற்று  வளர்வதுடன்,  திரட்சியான கடலைப் பயிர் உருவாகும்  நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்த னர். இந்நிகழ்ச்சியில் அக்கிராம விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே  400 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், கார் பறிமுதல்: ஒருவர் கைது

அரியலூர், மே 8 - ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்ட எஸ்.பி.செல்வராஜ் உத்தரவின்பேரில், ஜெயங்கொண்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை, கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் ரகசியமாக கொடுக்கும் படியும், ரகசிய தகவல் கொடுப்பவரின் விவரம் காக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நால் ரோடு பகுதியில் சிலர் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதைப் பொருட்களை காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான 400 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து நடத்திய விசாரணையில், குட்கா பொருட்களை ஏற்றுக் கொண்டு காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் காலாப்புறா ராஜ் புட்டோ காவாஷ் பகுதியைச் சேர்ந்த நீமாராம் (36) என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுபோல் பெங்களூரு, ராஜஸ்தானில் இருந்து போதைப் பொருள் மூட்டைகள் ஜெயங்கொண்டம் வழியாக கடத்தப்படுகிறதா என போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படும்
பேச்சுவார்த்தையில் உறுதி: போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர், மே 8 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றி யம் மற்றும் நகரப் பகுதிகளில் நிலவும் கடுமையான மின்வெட்டால், கோடை பயிர் களான நெல், பருத்தி நீரின்றி கருகும் அபா யம் உள்ளது.  கடுமையான மின்வெட்டை கண்டித்தும், விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 12  மணி நேரம் வழங்க வேண்டும். கருகும் நெல்,  பருத்தி பயிர்களை பாதுகாக்க வேண்டு மெனக் கோரி குடவாசல் மற்றும் வலங்கை மான் ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. சங்கத்தின் குடவாசல் ஒன்றியம் மற்றும்  நகரக்குழு சார்பாக மே 8 (புதன்கிழமை) அன்று குடவாசல் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடவாசல் வட்டாட்சி யர் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுத் தார்.  அதன்பேரில், மே 7 அன்று (செவ்வாய்)  மாலை, குடவாசல் வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் தேவகி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, குடவாசல் நகரச் செயலாளர் டி.ஏ.சரவணன், ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் நகரச் செய லாளர் டி.ஜி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கூட்டத்தில், மின்சார வாரிய துறையின ரால் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு  பிரிவாக பிரித்து சுமார் 10 முதல் 12 மணி  நேரம் வரை மும்முனை மின்சாரம் சீராக விநி யோகிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட் டது. மேலும் பகல் நேரங்களில் மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படும் என எழுத்துப்  பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதனை யடுத்து மே 8 அன்று அறிவிக்கப்பட்ட கண்டன  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.  வலங்கைமான் இதே கோரிக்கையை வலியுறுத்தி வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் உள்ள இளநிலை மின்வாரிய அலுவல கத்தை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வலங்கைமான் ஒன்றியம் சார்பாக  ஆலங்குடி கடைவீதியில் மறியல் போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  போராட்ட அறிவிப்பை அடுத்து, வலங் கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனால் ஆலங்குடியில் நடைபெற இருந்த  மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பிரமணியன், வலங்கைமான் ஒன்றிய  தலைவர் எஸ்.இளங்கோவன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.ராதா, வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

;