districts

img

திருவாரூர் ரயில் நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் துவக்கம்

திருவாரூர், நவ.25 - நாகை நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.செல்வராஜின் தொடர் முயற்சியால், ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று,  ஒன்றிய அரசின் அம்ரித் இந்தியா ரயில் நிலைய திட்டத்தின்கீழ் திரு வாரூர் ரயில் நிலையத்தை நவீன மாக்கும் வகையில் மேம்படுத்தும் பணி துவங்கியது. திருச்சி கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் திருவாரூர் ரயில் நிலையமும் ஒன்று.  இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த  வேண்டும். புதிய ரயில்கள் இயக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ரயில்கள்  கூடுதலாக சென்னை மற்றும் பெங்க ளூர் சென்றுவர கால அட்டவணை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப் பட்டன. மக்களின் நீண்ட கால கோரிக் கையை நிறைவேற்றக் கோரி, நாகை  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மற்றும் இடதுசாரி கட்சி கள் கூட்டாக பல்வேறு போராட்டங் கள் நடத்தின.  இதனடிப்படையில், தற்போது ஒன்றிய அரசின் அம்ரித் இந்தியா திட்டத்தின் வாயிலாக ரூ.8.36 கோடியில் திருவாரூர் ரயில் நிலை யத்தை நவீனப்படுத்தி, தரம் உயர்த்தும் பணிகள் கடந்த நவ.7 அன்று  துவங்கி நடைபெற்று வருகிறது.  குறிப்பாக திருவாரூர் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான, ரயில்  நிலைய முகப்பு வாயிலை ஆழித்தேர்  வடிவில் அமைக்கும் பணியும் நடை பெற உள்ளது. புதிய ரயில் நிலையத்தில் பழைய  கட்டிடங்களை நவீனப்படுத்தி புதிய கட்டடங்கள் விரிவுபடுத்துவது, பழைய பேருந்து நிலைய சாலை மற்றும் மேம்பால சாலையில் இருந்து  ரயில் நிலையத்திற்கு வரும் இணைப்பு சாலையை மேம்படுத்து வது, வாகன நிறுத்தம், நவீன கழி வறைகள், சுகாதாரமான குடிநீர், பய ணிகள் காத்திருப்பு அறைகள் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல  சரிவு பாதை அமைப்பது, புதிய பெயர் பலகை, எல்இடி அறிவிப்பு பலகை உள்ளிட்ட பணிகள் நடை பெற்று வருகின்றன. மேலும் பணிகள் நடைபெறு வதையொட்டி, பயணிகள் ரயில்  நிலையம் உள்ளே செல்வதற்கு  மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையான திருத்துறைப் பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயிலை  திருவாரூரிலிருந்து இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இரவில் விழுப்புரம் - மயிலாடுதுறை மற்றும்  திருச்சி, தஞ்சாவூர் ரயிலை திருவா ரூர் வரை நீட்டித்தும், அதிகாலை யில் திருவாரூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் பால வேலைகள் நிறை வடைந்ததும் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்தும் திரு வாரூர்-பட்டுக்கோட்டை-காரைக் குடி வழிய ராமேசுவரத்துக்கு ரயில்கள்  இயக்க வேண்டும். மீட்டர் கேஜ் காலத்தில் இருந்தது  போல் காரைக்குடியில் இருந்து தினமும் திருவாரூர் வழியாக சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பி ரஸ் ரயில் இயக்க வேண்டும். பெங்க ளூருவுக்கு தினமும் சென்று வரும் வகையில் ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு  நிறைவேற்ற வேண்டும் என  ரயில் பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். ரயில் மறியல் போராட்டம் திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்து, கடந்தாண்டு நவ.29 அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக மாபெ ரும் ரயில் மறியல் போராட்டம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொர டாச்சேரி, பேரளம், முத்துப்பேட்டை ஆகிய ரயில் பாதைகளில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.