தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், குழந்தைகள் மற்றும் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?