திருச்சிராப்பள்ளி, ஜன.27 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில், எழுத்தாளர் கனல் மைந்தனின் ‘ஊரு தாண்டியவன்’ நாவல் மற்றும் புலியாட்டம், வனத்தின் சுவடுகள் கவிதை தொகுப்பு ஆகிய நூல்கள் வெளி யீட்டு விழா திருச்சியில் வியாழனன்று நடை பெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலை வர் சிவ.வெங்கடேஷ் தலைமை வகித்தார். கவிஞர் பூவிழி தென்றல் வரவேற்றார். எழுத்தாளர் கனல் மைந்தன் நூல்களை வெளியிட, அதை கவிஞர் மாரியம்மாள், எழுத் தாளர் சீத்தா வெங்கடேஷ், மாதர் சங்க மாநகரச் செயலாளர் சரஸ்வதி மற்றும் கோவிந் தன் பெற்றுக் கொண்டனர். மாநில துணைத்தலைவர் நந்தலாலா வாழ்த்துரை வழங்கினார். ‘ஊரு தாண்டி யவன்’ நாவலை அறிமுகம் செய்து மாநகரச் செயலாளர் இளங்குமரன் பேசினார். புலி யாட்டம், வனத்தின் சுவடுகள் கவிதை தொகுப் புகளை அறிமுகம் செய்து முனைவர் பாலின், மாவட்ட பொருளாளர் ஹரிபாஸ்கர் ஆகி யோர் பேசினர். விழாவில் கவிஞர்கள் சுரபி ராமச்சந்தி ரன், சையத் இப்ராஹிம், நாடக நடிகர் சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக கிருஷ்ணமூர்த்தி, காந்தி, லெனின் ஆகி யோர் பாடல்கள் பாடினர். மாவட்டச் செயலா ளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.