districts

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

நாகர்கோவில், ஆக. 23

     கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேக்கோடு பொன்னச்சான் விளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் .இவரது மனைவி சுனந்த குமாரி (50 ), இவர் பனங்காலை பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார், செவ்வாய்க்கிழமை கடையில் இருந்த போது, மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதில் முன் பகுதியில் இருந்த இருவர் ஹெல்மெட் அணிந்த நிலையிலும், பின்னால் இருந்த வாலிபர் ஹெல்மட் அணியாமலும் இருந்துள்ளார்.  

    பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருந்த வாலிபர் சுனந்தகுமாரிடம் 50 ரூபாய் கொடுத்து இரண்டு சிகரெட் வாங்கியுள்ளார். அப்போது திடீரென சுனந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தாலி செயினை அறுத்து விட்டு அந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிள் களியக்காவிளை சாலை வழியாக சென்றுள்ளது. இது குறித்து களியக்காவிளை காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.