திருவாரூர், டிச.17 - சுதந்திரப் போராட்ட வீரர், தகை சால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா நினை வேந்தல் மற்றும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் ஞாயி றன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் கிளை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் சு.காளி முத்து, கிளைச் செயலாளர் பொன்.மகா லிங்கம் தலைமை வகித்தனர். ‘கவிஞர் தமிழ் ஒளி - வாழ்வும் கலை இலக்கிய பணியும்’ என்ற தலைப்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் மற்றும் ‘பொதுவுடமை இயக்க வரலாற்றில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் தீக்கதிர் திருச்சி மண்டல பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமுஎகச மாவட்டத் தலைவர் சௌந்தரரா ஜன், மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், கிளைப் பொருளாளர் அசோக் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.