districts

img

தொழிலாளர் விரோதச் செயல்பாடு! அரசு போக்குவரத்து கழக தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக!

சிஐடியு வாயிற்கூட்டம் திருச்சிராப்பள்ளி, மே 6 - அரசு போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரியின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக் குடி, கும்பகோணம் பகுதிகளின் அரசு  போக்குவரத்து கழக தலைமை அதிகாரியாக  (MD) மகேந்திர குமார் என்பவர் அண்மை யில் பதவியேற்றுள்ளார். இவர் வந்த பிறகு,  மேற்கண்ட பகுதிகளில் பணிபுரியும் ஓட்டுநர்,  நடத்துநர், மெக்கானிக்களுக்கு தர வேண்டிய  அவர்களுடைய விடுப்பை தராமல், விடுப்பு  எடுப்பவர்களுக்கு ஆப்செண்ட் போட்டு சம்பளத்தை பிடிக்கிறார். மேலும், காலம் காலமாக உள்ள 8 மணி  நேர வேலையை மாற்றி, 12 மணி நேரமாக  பணிபுரிய வைப்பது, மிகை நேர பணி  பார்க்க நிர்ப்பந்திப்பது போன்ற தொழிலா ளர் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரு கிறார். இதனால் தொழிலாளிகள் உடல் நலம்  பாதிப்பதோடு, விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும் பேருந்துகளின் இயங்கும்  நேரத்தை மாற்றி முழு நாளும் இயங்க வைக்கிறார். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதும், தனியார் பேருந்து கள் ஆதாயம் பார்க்கும் நிலையும் ஏற்படு கிறது.  மேற்கண்ட பாதிப்புகளை சரி செய்ய வலி யுறுத்தியும், அரசு போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரியின் நடவடிக்கையை கண்டித்தும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ராக்போர்ட் டெப்போ முன்பு திங்க ளன்று வாயிற்கூட்டம் நடைபெற்றது. வாயிற் கூட்டத்திற்கு சிஐடியு துணை பொதுச் செயலாளர் முருகன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். போக்குவரத்து சங்க தலைவர் கருணாநிதி, சிஐடியு மாவட்டத்  தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் பிரபு, சுப்பிரமணி, சிவானந்தம் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். கிளைச் செயலாளர் துரை ராஜ் நன்றி கூறினார்.

;