பாபநாசம், மார்ச் 1- திமுக, சிறுபான்மை அணி, மீனவர் அணி, ஆதிதிராவிட அணி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மேற்கு மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில், எழுது பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் யூசுப் அலி, மாவட்ட அமைப்பாளர் அனிபா, துணை அமைப்பாளர் ராயல் அலி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் புகழேந்தி, ஆதிதிரா விட அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பிரமணி, ஜமாத்தார்கள், ஒன்றியக் கவுன்சிலர் அனீஸ்பேகம் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோ யாளிகள், பொது மக்களுக்கு பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது. இதில் மருத்து வர் அழகு சிலம்பரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.