அறந்தாங்கி, ஏப்.10 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறையான் சேவை சங்கம் சார்பாக கல்லூ ரிக்கு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஏழு குடிநீர் சுத்திகரிப்பான்கள் (ஆர்ஓ) கல்லூரி முதல்வரிடம் வழங்கப் பட்டன. இதனை திருப்பெருந்துறையான் சேவை சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், சுதாகர், கணேசன், அழகேசன், ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.