பாபநாசம், ஆக.17-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் பேரூ ராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா ஆய்வு மேற் கொண்டார்.
பாபநாசம் பேரூராட்சியில் மின் மயானம் கட்டு மானப் பணி, அரையபுரம் சாலைப் பணி, வளம் மீட்பு பூங்கா வில் நடைபெறும் திடக் கழிவு மேலாண்மைப் பணிகளை கிரண் குராலா ஆய்வு செய்தார். ஆய்வின்போது தஞ்சா வூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாதவன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.