மதுரை, அக்.7- பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் பெண்ணு ரிமை பாதுகாப்பு மாநாட்டு தீர்மானங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை புற நகர் மாவட்டத்தின் பல பகுதி களில் தெருமுனை பிரச்சா ரக் கூட்டம் நடைபெற்றது. இதன்படி மேலூர் தாலுகா குழு சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு வீ.அடக்கிவீரணன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், தாலு காச் செயலாளர் எம்.கண் ணன், தாலுகா குழு உறுப்பி னர்கள் ஏ.தனசேகரன், எஸ்.பி.மணவாளன், சி.எஸ். மணி, பி.எஸ்.ராஜாமணி ஆகியோர் பேசினர். கே. ஆனந்த் நன்றி கூறினார். மேற்கு ஒன்றிய குழு சார்பில் பனங்காடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் பழனி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவா னந்தம் துவக்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பால கிருஷ்ணன், சி.மலர்விழி, மாவட்டச் செயற்குழு உறுப் பினர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சக்திவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் செ. ஆஞ்சி ஆகியோர் பேசினர். அலங்காநல்லூர் ஒன்றிய குழு சார்பில் கொண்டையம்பட்டியில் கிளைச் செயலாளர் எம். கோவிந்தராஜன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. இளங்கோவன், வி.உமா மகேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கண் ணன், ஒன்றியக் செயலா ளர் எஸ்.ஆண்டிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பி.பஞ்சாசரம் ஆகி யோர் பேசினர்.