தஞ்சாவூர், ஜன.31- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் மூளைச்சாவு அடைந்து உறுப்புகள் தானம் செய்து இறந்தவரின் உட லுக்கு செவ்வாயன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட் டம், சீர்காழியைச் சேர்ந்த 56 வயது நபர் மூளைக்கட்டி காரணமாக உயிருக்கு ஆபத் தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் திங்கள் கிழமை சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு, செவ்வாயன்று உயிரிழந்தார். இதனிடையே, மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். இதன்பேரில் இவரது ஒரு சிறுநீரகம் 35 வயது ஆணுக்கு பொருத் தப்பட்டது. மற்ற உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒதுக்கீட்டின்படி பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இவரது உட லுக்கு அரசு மரியாதை செலுத் தப்பட்டது. இறந்தவரின் உட லுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அப்போது, தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன், நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம், மருத் துவக் கண்காணிப்பாளர் சி.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.