districts

மாநிலக் கல்விக் கொள்கை: நாளை கருத்துக் கேட்புக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.9 - தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்து வமான மாநில கல்விக் கொள்கை வகுப்ப தற்காக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்து மாநிலக் கல்விக் கொள்கை சார்பான  பல்வேறு காரணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அக்டோபர் 11 அன்று காலை  10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்திட  திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் இடங்கள்
அந்தநல்லூர் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி, சோமரசம்பேட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, மணப்பாறை ஜீவன் (பி.எட்) கல்லூரி, கோவில்பட்டி விடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முசிறி எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, புள்ளம்பாடி குழந்தையேசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, திருவெ றும்பூர் பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் கொங்கு நாடு (பி.எட்) கல்லூரி, துறையூர் இமயம் (பி.எட்) கல்லூரி, தா.பேட்டை சௌடாம் பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எரக்குடி ஆர்.எஸ்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  வையம்பட்டி ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இக்கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார் வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பேரா சிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தங்களது கருத்துகளை நான்கு  தாள்களில் எழுதி வழங்கிடவும் தெரிவிக்கப் படுகிறது.
கருத்து கேட்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய காரணிகள்
முன் குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பள்ளி மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கான ஆசிரியர் பயிற்சிக் கல்வி, வளரிளம் பருவத்திற்கான மாறி வரும் உலகளாவிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு நவீன புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்கி மறுசீரமைப்பதற்கான கருத்து களை தெரிவித்தல். கற்றல் விளைவுகள், வேலைவாய்ப்பிற் கான திறன்கள் ஆகியவை உள்ளடங்கிய கல்வியினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அனை வருக்கும் சமமான தரமான கல்வியை மேம்ப டுத்தி வழங்குதல் குறித்த ஆலோசனைகளை தெரிவித்தல். தேர்வு முறைகளில் மேற் கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகள் குறித்த ஆலோசனைகளை தெரிவித்தல். ஆசிரியர் நியமனங்கள், பயிற்சி மற்றும் அவர்களுக்கான பொறுப்புகளை உறுதி செய்வதன் மூலமாக முன்மொழியப்பட்ட இலக்குகளை அடைதல் குறித்த மறுசீர மைப்புகள் தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தல். வாழ்வியல் திறன்கள், படைப்பாற்றல், மென்திறன்கள், மொழியாற்றல், சமூக நீதி மதிப்புகளை கல்வியின் அங்கமாக்கு வதற்கான ஆலோசனைகளை தெரிவித்தல். பள்ளிக் கல்வியினை முடித்த அனைவரும் கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், தொழிற்கல்வி போன்ற ஏதேனும் ஒரு உயர்கல்வியினைத் தொடருவதை உறுதி செய்தல் குறித்த ஆலோசனைகளை தெரி வித்தல். உயர்  கல்வியில் ஆராய்ச்சி போக்குகளின் தரத்தினை உறுதிசெய்தல். இந்திய மற்றும் அயலக நிதிசார் அமைப்புகளிடமிருந்து நிதி யினை பெறுவது தொடர்பான ஆலோசனை களை தெரிவித்தல்.  மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

;