districts

மண்வள மேம்பாட்டுப் பயிற்சி

பாபநாசம், ஜூலை 13-

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை மற்றும்  உழவர் நலத் துறை சார்பில் தமிழ்நாடு நீர்வள, நில வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மன்வள மேம்பாடு, உயிரி உரங்கள் பயன்பாடு குறித்த  பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயி களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (ஓய்வு) கலியமூர்த்தி பங்கேற்று பயிற்சியளித்தார். வேளாண் உதவி இயக்குநர் மோகன், வேளாண் அலுவலர் பிரியா, விதைச் சான்று அலுவலர் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.