districts

திறன் பெறா உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூன் 26-  

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில், காலியாக  உள்ள மூன்று திறன்பெறா உதவியாளர் பணியிடம் நிரப்பும் பொருட்டு, கீழ்க்காணும்  தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.

   காலிப் பணியிடங்களுக்கு விண்ணப் பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி, கட வுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி, உரிய  சான்றிதழ்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைத்து முதல்வர் (பொ), அரசு கவின் கலைக்கல்லூரி, மேலக்  கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு,  மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர்-612002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். காலிப் பணியிட விபரம்: பதவியின் பெயர் - திறன்பெறா உதவியாளர், சம்பள  விகிதம் - Level-1 (15,700-50,000), வயது-18  வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

   அதிகபட்ச வயது ஓசி-32, எம்.பி.சி, பி.சி(எம்), பி.சி.ஓ-34, எஸ்.சி, எஸ்.சி(ஏ),  எஸ்.டி-37, (1.1.2023 அன்றைய நிலவரப்படி)  கல்வித் தகுதி - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் இன  சுழற்சி பின்பற்றப்படும்.  

    விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 12.7.2023 (மாலை 5.45 மணிக்  குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்). குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது. விண்ணப்ப படி வத்தை தஞ்சாவூர் மாவட்ட இணையதளம்  https://thanjavur.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

   மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர் காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பின்றி ரத்து செய்யவோ, கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வருக்கு (பொ) முழு அதிகாரம் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.