districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து செப்.12-14 சிபிஐ தொடர் மறியல்

திருவாரூர், செப்.8 - திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை தந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திருவாரூர் மாவட்ட கட்சி அலு வலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒன்றிய  பாஜக அரசின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு சாத்திய மில்லாதது. அதேபோல் விஸ்வகர்மா யோ ஜனா திட்டம் குடும்பத்தில் உள்ள மாண வர்களை கல்லூரிக்குச் செல்லவிடாமல் தடுக் கும். எனவே ஒன்றிய அரசு இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.  விலைவாசி உயர்வு, வேலையின்மை, இந்தி மொழி திணிப்பு போன்ற ஒன்றிய அர சின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம் பர் 12,13,14 ஆகிய தேதிகளில் தொடர் மறி யல் போராட்டம் தமிழகத்தில் நடைபெறும். டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதி களில் போதிய தண்ணீரின்றி கருகிய குறுவை  பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார். பேட்டியின் போது சிபிஐ மாவட்டச் செய லாளர் வை.செல்வராஜ், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி. எஸ்.மாசிலாமணி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.