திருவாரூர், ஏப்.19-
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் மகாராஜபுரத்தில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மூத்த தோழர் வி.உத்திராபதி செவ்வா யன்று வயது மூப்பு காரணமாக காலமா னார்.
அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.