கும்பகோணம், ஜூலை 18-
தோழர் கே.கலியமூர்த்தி வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை காலமானார்.
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினரும், விவ சாயிகள் சங்க ஒன்றிய முன்னாள் தலைவரும் ஆவார். பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.
அவரது மறைவு செய்தி அறிந்து சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நீலமேகம், ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், கும்பகோணம் ஒன்றி யச் செயலாளர் ஜேசுதாஸ், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் செ.ராமலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.