நாகர்கோவில், ஆக.16-
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை அமைந் துள்ள வங்ககடல்பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப் பட்டது.அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும்அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
கடலின் இயல்பு நிலை மாற்றத்தால், கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்ட பத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்பட வில்லை.