districts

img

முதியவரின் உயிரை காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை

திருச்சிராப்பள்ளி, செப்.26 - இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில்  இருந்த முதியவரின் உயிரை காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர் கள் சாதனை படைத்துள்ள னர். திருச்சி அப்போலோ  மருத்துவமனையில் நடந்த செய்தியா ளர்கள் சந்திப்பின் போது இதய அறுவை  சிகிச்சை நிபுணர்கள்ஸ்ரீகாந்த்புமணா, அரவிந்த் ரவீந்திரன் ஆகியோர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “தஞ்சையை சேர்ந்த 65 வயது முதியவ ருக்கு கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆஞ்சியோ செய்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரையை அந்த முதியவர் ஏற்கவில்லை.  மாரடைப்பு ஏற்பட்ட 3 வாரங்களுக்குள் முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ரத்த பின் சுற்றோட்டம், ரத்தக்குழாயில் துளை,  ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  இந்நிலையில் மூச்சு  விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் 10 நாட்க ளுக்கு பிறகு இதய நிபுணரை சந்திக்க காத்தி ருந்தபோது மயங்கி விழுந்தார். அங்கு அவ ருக்கு சிபிஆர் அளிக்கப்பட்டு எக்கோ பரி சோதனை செய்த போது இதயத்தை சுற்றி ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.

உடல்நிலை சற்று மோசமான நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய துடிப்பு அதிகமாகவும், ரத்த அழுத்தம் குறை வாகவும் இருந்தது. தொடர்ச்சியாக இதயத் தில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டி ருந்ததால் அவரது உடலில் நடுக்கம் இருந்தது. சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டு  சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருந்தது.  மிட்ரல் வால்வில் கசிவு அதிகமாக இருந்தது.  இதயத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. எனவே இதய நோய் நிபுணர் குழு வினர் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து உடனடி அவசர இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக இதய  ரத்தக்குழாய் சரிசெய்யப்பட்டு இதயத்திற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்யவும் வழி செய் யப்பட்டது. அன்னுலோபிளாஸ்டி மூலம் மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்பட்டு கசிவு  தடுக்கப்பட்டது. அத்துடன் துளையும் அடைக் கப்பட்டது. உடல்நிலை படிப்படியாக மேம்பட்ட நிலையில் 6வது நாளில் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட் டார். இரண்டு வாரங்களுக்கு பின் பரிசோ தித்த போது அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்” என்றனர். பேட்டியின் போது இதய மயக்கவியல் நிபு ணர்கள் ரோகிணி, சரவணன், இதயநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் காதர்சாகிப், சாம் சுந்தர், துணை பொதுமேலாளர் சங்கீத் ராம மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

;