மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் கருவாழகரை ஊராட்சியில் சம்பா சாகுபடி பயிர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா, வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.