districts

img

திண்டுக்கல் பூட்டு ரயில் நிலையத்தில் விற்பனை

திண்டுக்கல், டிச.16- திண்டுக்கல் ரயில் நிலை யத்தில் ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் ஒன்  ஸ்டேசன், ஒன் புராடக்ட்  டிராலி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் பொருட் களை விற்பனை செய்யும் கடை களை ரயில்வே நிர்வாகம் அறி முகம் செய்துள்ளது. மதுரையில் மல்லிகை பூவும், திண்டுக்கல்லில்  புகழ்மிக்க பூட்டு விற்பனை டிராலி  துவங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.