districts

img

சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி வாயிற்கூட்டம்

பெரம்பலூர், ஜன.5 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்  பணியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் துறைமங்கலம் கோட்டப் பொறியாளர் அலுவ லகம் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோ ரிக்கை விளக்க கூட்டம் நடத்தினர். கோட்ட  தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார்.  கோட்ட செயலாளர் சி.சுப்ரமணியன் துவக்க வுரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பி னர் பி.சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.  நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு இரண்டு சாலைப் பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்ப டுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழி யருக்கான ஊதியம் ரூ.5,200 - ரூ. 20.200 மற்றும்  தர ஊதியம் ரூ.1,900 எனக் கணக்கீட்டு ஊதியம்  வழங்கிட வேண்டும்.  பணிநீக்க காலத்திலும் பணிக் காலத்திலும்  உயிர்நீத்த சாலைப் பணியாளர்களின் வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் பணி நிய மனம் கோரி 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு சிறப்புக் கவனம் செலுத்தி நெடுஞ்சாலைத் துறையிலேயே பணி வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலி யுறுத்தி நீண்ட காலமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை கோரிக் கைகளை நிறைவேற்றவில்லை.  எனவே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி வாயிற் கூட்டம் நடைபெற்றது. கோட்டப் பொருளா ளர் எஸ்.ரஜினி நன்றி கூறினார்.