districts

வலையில் சிக்கிய கடல்பசு மீட்பு

பேராவூரணி, மே 10-  

   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மனோரா கடற்கரையிலி ருந்து 1.5 கி.மீ தூரத்தில் கடலுக்குள் மீன்  வளர்ப்பிற்காக கட்டப்பட்டிருந்த வலையில்,  அரிய வகை உயிரினமான சுமார் 150 கிலோ  எடையுள்ள கடல்பசு சிக்கிக் கிடந்தது.  

  இதுகுறித்து பட்டுக்கோட்டை வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மனோரா அருகில் உள்ள சின்னமனையைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன், வலையிலிருந்து மீட்கப்பட்டு மீண்டும் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது.

   அரிய வகை தாவர உண்ணியான கடல் பசுவை பாதுகாக்கவும், வாழ்விடத்தை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதல் முறையாக, மனோராவில் கடல்பசு பாது காப்பு மையம் ரூ.15 கோடியில் அமைக்க  தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.