districts

திருச்சி முக்கிய செய்திகள்

விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

தஞ்சாவூர், நவ.6 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி கள் துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பேராவூரணி பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, அரசு மருத்துவமனை சாலை, கடைவீதியில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனி வாசன் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.  இதில், தீபாவளி பண்டி கையை மகிழ்ச்சிகரமாகவும் பாதுகாப்பாகவும் கொண் டாட வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வெடி  வெடிப்பதில் ஏற்படும் விபத் துகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் வரை மீண்டும் பேருந்துகள்  இயக்க கோரிக்கை

பாபநாசம், நவ.6 - தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்கிரஹாரம் வழியாக திருக்கருக்கா வூர் வரை அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்கிரஹாரம், உதாரமங்களம், கொத்தங்குடி, கோவத்தக்குடி, களஞ்சேரி வழியாக திருக்கருக்காவூர் வரை அரசுப் பேருந்து வந்து சென்றது. அதன்பின் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. இதேபோன்று களஞ்சேரி வரை வந்து சென்ற 2 மினி பேருந்துகளும் கொரோனா காலக் கட்டத்தில் நிறுத்தப்பட்டு விட்டன.  இதனால் கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் மிகுந்த சிரமத்தை சந்திக் கின்றனர். கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்திலிருந்து 4 கிலோ  மீட்டர் நடந்து மாரியம்மன் கோயில் சென்றோ, 4 கி.மீட்டர் தொலை வுள்ள அன்னப்பன்பேட்டை சென்றோதான் பேருந்து ஏற முடியும்.  இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்தோ, பைக்கில் செல்ப வர்களிடம் லிப்ட் கேட்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. பணிக்குச் செல்வோர் உட்பட அனைவரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கிராமங்களில் பேருந்து வசதி, தரமான சாலை, குடிநீர்,  மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து, மினி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமிழ் ஸ்போர்ட்ஸ்  அகாடமியில் கலை விழா

தஞ்சாவூர், நவ.6 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி யில், மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்ற மாண வர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து  மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், மாண வர்களுக்கு இடையிலான கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.   நிகழ்வில் யோகா பயிற்சியாளர் சௌ.ஜெயப்பிரகாஷ், கராத்தே  பயிற்சியாளர் ஸ்பர்ஜன்ராஜ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி, செயலாளர் ஆசிரியர்  அ.காஜாமுகைதீன், பொருளாளர் இரா. ராம்குமார், சமூக ஆர்வலர் சித.திருவேங்கடம் ஊடகவியலாளர் மெய்ச்சுடர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மரக்கன்றுகள் நடும் விழா 

தஞ்சாவூர், நவ.6-  கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக மருத்துவ அணி சார்பில் மரக்கன்றுகள் நாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர்  தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆர்.திருமலைச்சாமி முன்னிலை  வகித்தார். இதையொட்டி வாகை, வேம்பு, புங்கை, ரோஸ்வுட் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.