தஞ்சாவூர், டிச.25 - தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியில் தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ் நாள்காட்டி 25 வது ஆண்டு வெளியீட்டின் அறிமுக விழா, தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாண வர்களுக்கான பாராட்டு விழா, திருக்குறள் சாதனை சிறுவ னுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடை பெற்றது. பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடை பெற்ற இவ்விழாவிற்கு, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் அ.செ.சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் வென்ற மாணவிகள் ரமா தேவி, பிரியதர்ஷினி, சரஸ்வதி, தமிழ்ச்செல்வி மற்றும் திருக்குறள் சாதனைச் சிறுவன் சாதவ் ஆகியோர் பாராட்டப் பட்டனர். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்பத் தமிழர், தமிழ் நாள்காட்டியை அறிமுகம் செய்து உரையாற்றினார். திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாள்காட்டியை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தமிழ் நாள்காட்டியையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி மைய மாணவி கள், பாரதி மகளிர் தையல் பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மெய்ச்சுடர் நா.வெங்க டேசன் வரவேற்றார். த.பழனிவேல் நன்றி கூறினார்.