districts

img

நிவாரண உதவிப் பொருட்களை தூக்கி வீசிய அமமுகவினர்: சிபிஎம் கண்டனம்

மயிலாடுதுறை, நவ.20- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி ஊராட்சி அப்புராஜ புரம் புத்தூர் கிராமத்தில் மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதாக கூறி அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சனிக்கிழமை வந்தார்.  நிவாரணப் பொருட்கள் வழங்குவ தற்காக வந்த அக்கட்சியின் நிர்வாகிகள், நிவாரண பொருட்களை அமைதியான முறையில் வழங்காமல் பொதுமக்களின் கூட்டத்தை நோக்கி  பொருட்களை தூக்கி வீசி எறிந்து அநாகரிகமாக நடந்து  கொண்டனர். இதனால் பொதுமக்களி டையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சிலர்  மயக்கமடைந்து கீழே விழுந்து காயம டைந்து உள்ளனர். இச்சம்பவம் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள, அப்பகுதி மக்  களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி யுள்ளது.  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுக்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்ப னார்கோவில் ஒன்றியக்குழு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கனமழை வெள்ளத்  தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, வெற்று விளம்பர அரசியல் செய்ய வேண்டாமென்றும் குறிப்  பிட்டுள்ளது.

;