கிருஷ்ணகிரி,மார்ச் 24- சரண்யாவின் காதல் திருமணத்தை ஏற்காமல் மருமகன் ஜெகன் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டக் குழு வன்மையாக கண்டித்துள்ளது. கிருஷ்ணகிரி நகர் ஒட்டிய கிட்டம்பட்டி அருகே வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜெகன், அவதானப்பட்டி முழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா இருவரும் காத லித்து வந்தனர். இதனை சரண்யாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் ஜெகன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி என்ப தாலும் காதலித்து திரு மணம் செய்து கொண்டதை யும் ஏற்க முடியாமல் வன்மத்துடன் இருந்துள் ளனர். மார்ச் 21ஆம் தேதி சங்கர் தன் மகன் சந்தோஷ் மூலமாக ஜெகனை கிருஷ்ண கிரி சேலம்-தேசிய நெடுஞ் சாலைக்கு வரவழைத்து உறவினர்களான திம்ம ராயன், கோவிந்தராஜ், குமார், சுரேஷ் ஆகியோரு டன் சேர்ந்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்த னர். இந்த கொலைக்கு இரண்டு மாதமாக திட்ட மிட்டு வந்துள்ளனர். இத னையடுத்து, சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் முரளி, நாகராஜ், சேலம் நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளனர். இன்னும் சம்மந்தப்பட்ட 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரண்யா கூறியதாவது:- நானும் ஜெகனும் காதலிப்பதை தெரிந்து கொண்ட எனது தந்தை சங்கர், எனக்கு பணக்கார மாப்பிள்ளை பார்த்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த நான் ஜெகனை திருமணம் செய்து கொண்டேன்.
அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் பலமுறை எனது தம்பி சந்தோஷ் மூலம் தொடர்பு கொண்டு எங்கள் இருவரையும் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்கள். இந்த நிலையில் தான் எனது கணவர் ஜெகனை கூட்டாக வெட்டி படு கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு சட்டம் கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமையில் பொறுப்பு மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், கிருஷ்ணகிரி வட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் லெனின்முருகன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பெரிய சாமி ஆகியோர் ஜெகன் வீட்டிற்கு சென்று குடும்ப உறுப்பினர்களை சந்தித்தனர். அப்போது, மகனை இழந்த குடும்பத்திற்கும் கணவனை இழந்த சரண்யாவுக்கும் ஆறுதல் கூறியதோடு மார்க்சிஸ்ட் கட்சி அரணாக நிற்கும் என்றனர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது, “இந்த கொலை யில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் அனைவரையும் கைது சிறையில் அடைக்க வேண்டும். வழக்கை துரிதமாக நடத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும்”என்றனர். தருமபுரி தனியார் கல்லூரியில் பிஎட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜெகனின் மனைவி சரண்யாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஒரே சாதியில் பொரு ளாதார ஏற்றத்தாழ்வை காரணம் காட்டி கொலை கள் நடப்பதை மாவட்ட நிர்வாகமும் காவல்துறை யும் தடுத்திட சிபிஎம் வலு வான போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்தார்.