districts

img

பட்ஜெட்டில் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்து அறிவிக்காததை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 21- தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் வாழ்வா தாரக் கோரிக்கைகள் குறித்து அறிவிக்காததை கண்டித்து  தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் சார்பில் செவ்வா யன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு அலுவ லகங்கள் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருச்சி அரசு மருத்துவ மனையில் வட்டக் கிளை பொறுப்பாளர் அபுதாகிர் தலைமையிலும், இஎஸ்ஐ மருத்துவமனையில் வட்டக் கிளை தலைவர் சுரேஷ் பிரபு தலைமையிலும், துணை இயக்குநர் சுகாதார பணிகள்  அலுவலகம், இணை இயக்  குநர் மருத்துவம் அலுவல கத்தில் மாவட்ட துணைத் தலைவர் சிவசங்கரன் தலை மையிலும், பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்தில் மலர்  மன்னன் தலைமையிலும், நீதிமன்ற வளாகத்தில் உள்ள  மாவட்ட வன அலுவலகத் தில் வட்டக்கிளை பொறுப் பாளர் மோகன்ராஜ் தலை மையிலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் திருச்சி 2 வட்டக் கிளை தலைவர் சவரிராஜ் தலைமையிலும்,  தொழிலாளர் இணை ஆணையர் நலத்துறை அலு வலகத்தில் வட்டக்கிளை பொறுப்பாளர் முருகதாஸ் தலைமையிலும், வேளா ண்மை துறை அலுவலகத் தில் கவியரசன் தலைமையி லும், திருவெறும்பூர் அரசு  தொழில் பயிற்சி நிலையத் தில் உமர் தலைமையிலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலை  துறை அலுவலகம், தொட்டி யம் வட்டாட்சியர் அலுவல கம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலை வர் பால்பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் ஜீவா னந்தம், மாவட்டச் செயலா ளர் பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலாளர் அமுத வல்லி, மாவட்டப் பொருளா ளர் பாபு, நெடுஞ்சாலைத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்  சுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க  வட்டத் தலைவர் சண்முகம், வட்டச் செயலாளர் தம்பி துரை, மாவட்டப் பொருளா ளர் செங்குட்டுவன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர். குடவாசல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டாட்சி யர் அலுவலக முன்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க  வட்டத் தலைவர் ஆர்.கற்ப கம் தலைமை வகித்தார்.  மாவட்ட இணைச் செயலா ளர் கே.பாலசுப்ரமணியன், வட்டச் செயலாளர் அன்பழ கன், பெருளாளர் சங்கர் உள்  ளிட்டோர் பங்கேற்றனர்.

;