districts

பெண் பணியாளருக்கு மீண்டும் வேலை வழங்குக! தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.21- திருச்சி மாநகராட்சி 62 ஆவது வார்டில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த சுய உத விக் குழுவைச் சேர்ந்த பெண் தூய்மை பணியாளரை பணியில் இருந்து நிறுத்தி யதை கண்டித்தும், அவருக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த ஓட்டு நர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப் தொகையை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.  நுண் உரம் கிடங்கு தூய்மை பணியா ளர்களை 11 மணி நேரம் வேலை வாங்கு வதை கைவிட்டு 8 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி திருச்சி மாநகராட்சி தொழிலா ளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் செவ்வா யன்று மாலை டிவிஎஸ் டோல்கேட் பகுதி யில் உள்ள 4-ஆவது மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநக ராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் இளையராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர் மாறன், மாவட்ட பொறுப்பாளர் ராஜு  ஆகியோர் பேசினர். கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் தூய்மை பணியா ளர்கள் மற்றும் ஒப்பந்த ஓட்டுநர்கள் கோட்ட அலுவலகத்தில் தரையில் அமர்ந்து காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் மற்றும் மாந கராட்சி அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சங்க மாவட்ட துணைத் தலை வர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை களை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

;