districts

img

பிப்.16 வேலைநிறுத்தத்தை விளக்கி கரூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

கரூர், பிப்.13 - தொழிலாளர் விரோத, விவசாயிகள், மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்.16 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.  இந்தப் போராட்டத்தை விளக்கி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் கரூர் மாவட்டம் மின்வாரிய கரூர் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு எல்பிஎப் சங்க மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர்   ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். பல்வேறு சங்க தலைவர்கள் பேசினர்.