திருத்துறைப்பூண்டி நகராட்சி பெரிய சிங்களாந்தி கச்சவராயன் திடல் பகுதியில் வசித்து வந்த மாணிக்கம் மனைவி லோகாம்பாள் என்பவரின் கூரைவீடு, ஞாயிறன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுவதும் சேதமடைந்தது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்க திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் விடுத்த வேண்டுகோளை ஏற்று, திருவாரூர் நாம் கோ தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.3000 மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், நாம் கோ தொண்டு நிறுவன செயலாளர் ஜீவானந்தம், சமூக ஆர்வலர் பாலம் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.