districts

img

சிபிஎம் மாநில அலுவலக கட்டிட நிதி வழங்கல்

பெரம்பலூர், பிப்.20-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாநி லக்குழு கூட்டம் ஞாயிறன்று (பிப்.19) நடைபெற்றது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர் மாவட்டக் குழு சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் பி. சுகந்தி, சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லத் தலைவர் டி.செல்லக் கண்ணு ஆகியோர் முன்னி லையில், சிபிஎம் மாநிலக் கட்டிடத்திற்கான நிதி, இரண்டாவது தவணையாக ரூ.30 ஆயிரம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்  குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜிடம், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் வழங்கினார். மாவட் டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றி யச் செயலாளர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.