தஞ்சாவூர், ஆக.9-
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரசிங்கம்பேட்டை பகுதிக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு ஒன்றியம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வி.பிரபுதேவா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி கோரிக்கை களை விளக்கிப் பேசினார். இதில், ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் முதல் அகரமாங்குடி, வீரசிங்கம்பேட்டை, திருச்சோற்றுத்துறை வழியாக இயங்கிய அரசுப் பேருந்து எண்.26ஐ மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும். ஊராட்சி படிப்பகம் மற்றும் விளையாட்டு உபகர ணங்களுடன் கூடிய விளையாட்டு மைதா னம் அமைத்து தர வேண்டும். 25 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட பழைய ஓட்டு (தொகுப்பு) வீடுகளை உடனடியாக பழுது பார்த்து தர வேண்டும்.
நூறு நாள் வேலையை பிரிவினை இல்லாமல் அனைத்து நாட்களிலும், அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்க வேண்டும். இளமாரியம்மன் கோவில் பகு திகளில் உடனடியாக துப்புரவு பணியா ளர்களை நியமிக்க வேண்டும். மயானச் சாலைகளில் மின்மாற்றி அமைத்து, மின் விளக்கு அமைத்தும், மந்தைதிடல் பகுதி யில், உயர்கோபுர மின் விளக்கும் அமைத்து தர வேண்டும். அனைத்துப் பகுதிக்கும் குடி நீர் குழாய்களை புதிதாக மாற்றி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர் களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.