districts

img

கேங்மேன் பணியாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கிடுக!

கும்பகோணம், ஜன.13- கும்பகோணத்தில் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடக்குக் கோட்ட கேங்மேன் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. பேரவைக்கு வட்டச் செய லாளர் காணிக்கைராஜ் தலைமை வகித்தார். கார்த்திக், டேனியல், கண்ணதாசன், பூபேஷ் குப்தா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  கோபால்சாமி வரவேற்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ், மாநில துணைத்தலைவர் ராஜாராமன், வட்டத் தலைவர் அதிதூதமைக்கேல் ராஜ், வட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, கும்பகோ ணம் கோட்ட தலைவர் மணி வண்ணன், செயலாளர் ஷேக்  அகமது, உஸ்மான் உசேன்,  கும்பகோணம் வடக்கு கோட்டத் தலைவர் ராதா,  செயலாளர் தேவேந்திரன்  ஆகியோர் சிறப்புரையாற்றி னர். கேங் மேன் சுதாகர் நன்றி தெரிவித்தார். பேரவையில் கேங்மேன் பணியாளர்களை உதவியா ளர்களாக மாற்றிட வேண் டும், பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கிட வேண்டும், கேங்மேன் பணி யாளர்களுக்கு மின் வாரியத் தால் நீதிமன்றத்தில் அளித் துள்ள உத்தரவாதத்தின் படி யான பணிகளை மட்டுமே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.