districts

img

மின்துறையை பொதுத் துறையாகவே பாதுகாத்திடுக! மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்ட 26-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருண் சுமங்கலி மஹாலில் தோழர் பஞ்ச ரத்னம் நினைவரங்கத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு மாநில  துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை லால்குடி கோட்ட இணைச் செயலாளர் டி.இருதயராஜ் ஏற்றி னார். அஞ்சலி தீர்மானத்தை பெரு நகர் வட்ட துணைத்தலைவர் பழனி யாண்டி வாசித்தார்.  வேலை அறிக்கையை பெருநகர்  வட்ட செயலாளர் எஸ்.கே.செல்வ ராஜ் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் எம்.இரு தயராஜ் சமர்ப்பித்தார். மண்டல செய லாளர் அகஸ்டின் துவக்கவுரை யாற்றினார். சங்க மாநிலத் துணைத் தலைவர்  ராஜாராமன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி மண்டல தலைவர் சீனிவா சன், தமிழ்நாடு மின் ஊழியர் ஓய்வு  பெற்றோர் நல அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் பஷீர், சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டச் செயலா ளர் சிவராஜன், சங்க முன்னாள்  மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் விவசாயத்திற்கும், ஏழை, அடித்தட்டு மக்களின் குடிசை  வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கி சேவை செய்து வரும் மின்  துறையை தொடர்ந்து பொதுத்துறை யாகவே பாதுகாக்க வேண்டும். மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக சம்பளம் இல்லா மல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380-ஐ  வாரியமே நேரடியாக வழங்க வேண்டும்.

அவர்களை படிப்படியாக நிரந்தரப் படுத்த வேண்டும். கேங் மேன் பணியாளர்களின் பயிற்சி காலத்தை 3 மாதங்களாக குறைத்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  அவரவரின் சொந்த மாவட்டங் களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். விபத்து சிகிச்சைக்கான வாரிய உத்தரவு எண் 22/2013ஐ கேங்மேன் பணியாளர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் பணியாற்றி வரும் ஊழி யர்கள், அலுவலர்கள், பொறியா ளர்கள் உட்பட அனைவருக்கும் 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய  ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்.  மின்வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த பஞ்சப்படி மற்றும் சரண்டர் தொகையை உடனே  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவ ராக பி.நடராஜன், செயலாளராக எஸ்.கே.செல்வராஜ், பொருளாள ராக டி.பழனியாண்டி, துணைத்தலை வராக எம்.இருதயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் உமா நாத் நிறைவுரையாற்றினார். முன்ன தாக பெருநகர் வட்ட இணை செய லாளர் நடராஜன் வரவேற்றார். கிழக்கு கோட்ட செயலாளர் நாக ராஜன் நன்றி கூறினார்.

;