தஞ்சாவூர்/கரூர், டிச.8 - மின் பகிர்மானம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய, மின்சார சேமிப்பு மற்றும் பாது காப்புக்கான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், கல்லூரி அறிவியல் கழக மும் இணைந்து ஒருங்கிணைத்த இந் நிகழ்வில், மாவட்டம் முழுவதும் இருந்து 18 பள்ளிகளின் ஆற்றல் மன்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருங்கி ணைப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் நளினி, செயற் பொறியாளர் விமலா, உதவி செயற் பொறியாளர் மஞ்சுளா, கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேரா. மலர்விழி, விலங்கியல் துறைத்தலை வர் பேரா.சந்திரகலா, ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் நடராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் வெ. சுகுமாரன் ஆகியோர் பேசினர். முன்னதாக, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற் றார். துணைத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார். நூல் வெளியீடு குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பேராசிரியர் வெ.சுகுமாரன் எழுதிய “எதிர்கால தலைமுறைகளுக்கான ஆற்றல் வளம்” என்னும் நூலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட, முதல் பிரதியை கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜான் பீட்டர் பெற்றுக் கொண்டார். ஆற்றல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. ராஜசேகர் முடிவுகளை வெளியிட்டு வாழ்த்தினார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 75 ஆசிரியர்களுக்கு வெண்ணை மலை சேரன் பள்ளியில் பயிற்சி அளிக்கப் பட்டது. பின்பு, மின் சேமிப்பு, மின் பாது காப்பு என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, காந்தி கிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கரூர் செயற்பொறியாளர் மாலதி தலைமை வகித்தார். கரூர் செயற்பொறி யாளர் சு.கணிகை மார்த்தாள் வரவேற் றார். கரூர் தலைமைப் பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் துவக்கி வைத்து பேசினார். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் லெ.சுமதி வெற்றி பெற்ற 450 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா, மாவட்ட துணைத் தலைவர் முனைவர் என்.சாகுல்அமீது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். எஸ்.அன்பழகன், அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் பேசினர். மாவட்டப் பொரு ளாளர் ஏ.தமிழரசி நன்றி கூறினார். வானவில் மன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.