தஞ்சாவூர், ஜூன் 13-
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடை பெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதி யான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள்,
தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின்; நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.