districts

திருச்சி முக்கிய செய்திகள்

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், செப்.20 - தஞ்சாவூர் விற்ப னைக் குழு, பாப நாசத்தை அடுத்த கபிஸ் தலம் அருகே கீழக்  கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை  வகித்தார். பருத்தி  ஏலத்தில், கும்பகோ ணம் மற்றும் இதைச்  சுற்றியுள்ள கிராமங்களி லிருந்து 870 விவசாயி கள் சராசரி 1025 குவிண் டால் பருத்தி எடுத்து வந்த னர். இதில் கும்பகோ ணம், பண்ருட்டி, விழுப் புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வணிகர்கள் பங்கேற்றனர். இதில்  அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.7329, குறைந்த பட்சம் ரூ.5500, சராசரி ரூ.6569 என விலை நிர்ண யம் செய்தனர். பருத்தி யின் மதிப்பு சராசரி ரூ.67.03 லட்சம்.

செப்.27-இல் பேச்சுப் போட்டி

திருச்சிராப்பள்ளி, செப்.20 - பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி செப்.27 அன்று காலை 10 மணிக்கு கல்லூரி மாண வர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை, அந்தந்த  கல்லூரி முதல்வர் மூலம்  தெரிவு செய்து போட்டிக் குரிய பரிந்துரை படி வத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்ப வேண்டும். இதில் வெற்றி  பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல்  பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என வழங் கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

எரிவாயு குறைதீர் கூட்டம்

கரூர், செப்.20 - கரூர் மாவட்ட வரு வாய் அலுவலர் தலை மையில், மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில் 29.9.2023 அன்று மாலை 4 மணிய ளவில் எரிவாயு நுகர் வோர் குறைதீர் கூட்டம்  நடைபெற உள்ளது.  எரிவாயு நுகர்வோர் கள் மேற்படி நாளில் நடை பெறும் குறைதீர் கூட்டத் தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர் பான புகார்களை தெரி விக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று மின் குறைதீர் கூட்டம்

அறந்தாங்கி, செப்.20 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொ றியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், அறந்தாங்கி மின்வாரிய அலுவல கத்தில் செப்டம்பர் 21  (வியாழக்கிழமை) காலை 10.30 மணியள வில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதுக் கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை யில் நடைபெற உள்ளது.  இதில் மின் நுகர்வோர் கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

செப்.23 இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, செப்.20 - கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.  இம்முகாம், செப்.23 (சனிக்கிழமை) அன்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.  மேலும், மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள், இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்புகள் வரை முடித்த 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் தங்களது சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலை நாடுநர்கள், தமிழ்நாடு அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் கணவன் பலி;  மனைவி படுகாயம்

புதுக்கோட்டை, செப்.20 - புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே இளைய வயலைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (65). இவருடைய மனைவி இளஞ்சியம் (60). இருவரும் புதன்கிழமை மாலை  இளையவயல் பேருந்து நிறுத்தம் அருகே ஆடு மேய்த்துக்  கொண்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி  வந்த கார், ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த அருணாச்ச லம், இளஞ்சியம் மீது பலமாக மோதியுள்ளது.  இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருணாச்சலம்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இளஞ்சியம் படு காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீர னூர் போலீசார் இளஞ்சியத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இளஞ்சியம் சிகிச்சை பெற்று வருகிறார். அருணாச்சலத்தின் உடல் கூராய் வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கீரனூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்ப் பல்கலை.யில் தேசியக் கருத்தரங்கம்

தஞ்சாவூர், செப்.20-  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும்  மூலிகை அறிவியல் துறையின் சார்பில், செவ்வாய்க்கிழமை ‘மாசில்லா பூமிக்கான புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், உயிரினங்களைப் பாதுகாப் பதற்கான வழிமுறைகளைக் கூறித் தலைமையுரை ஆற்றி னார். தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர்  சி.தியாகராஜன், அறிவியல் புலத்தலைவர் முனைவர் ரெ.நீல கண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னதாக கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் மு.முத்துக்குமார்  ‘பருவநிலை மாற்றத் தின் அறிவியல்’ என்றத் தலைப்பில் மையக் கருத்துரை வழங்கி சிறப்புரை ஆற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி யின் பேரா.முனைவர் ச.ரவிச்சந்திரன் ‘உமிழ்வு கட்டுப் பாட்டு உத்திகள்’ குறித்து சிறப்புரை ஆற்றினார்.  இந்த தேசியக் கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தினர் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்  6 பேருக்கு மறுவாழ்வு

தஞ்சாவூர், செப்.20 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்த இளை ஞரின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேர் பயன டைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், மாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத் தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை  அறிந்து, உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக  வழங்குவது என அவரின் பெற்றோர் மற்றும்  உறவினர்கள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்தனர். பின்னர், இளைஞரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற  உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை பிரித்தெடுத்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, இதயமும், நுரையீரலும் சென்னை மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இரு சிறுநீரகங்களில் ஒன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், தோல்  மதுரை மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இந்த உறுப்பு தானம் மூலம் 6 பேர் பயனடைந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் கூறுகையில், “தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 11 மாதங்களில் மூளைச் சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்படு வது இது 5 ஆவது முறையாகும். இதுவரை  இந்த மருத்துவமனையில் 8 நோயாளி களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது. இதில் 5 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை கொடையாளிகளிடம் இருந்தும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்தும் பெறப் பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக முதல்வரின்  விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மூளைச்சாவு அடைந்தவர்களிட மிருந்து மொத்தம் 25 உறுப்புகள் தானமாக பெறப்பட்டதன் மூலம், 25 பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது” என்றார். இந்த உறுப்பு தான அறுவை சிகிச் சையை மேற்கொண்ட மருத்துவக் குழு நிபு ணர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டினார்.

செப்.23 ஆலங்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை, செப்.20 - முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ  முகாம் செப்.23 அன்று ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. முகாமில் மருத்துவச் சான்றுடன்கூடிய அடையாள அட்டை வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பம் பெறுதல், சரிபார்த்தல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட பரிந்துரைகள் செய்யப்பட உள்ளன.  எனவே, பிற மறுவாழ்வு உதவிகளான பராமரிப்பு உதவித் தொகை, வங்கிக்கடன் மானியம் மற்றும் உதவி உபகர ணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (6), ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகிய வற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இதுவரை அட்டை  பெறாத மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் விண்ணப்பிக் கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளார்.        

பனை விதைகளில் உருவாக்கப்பட்ட விநாயகர்

பாபநாசம், செப்.20 - பல்வேறு விநாயகர் வடிவங்கள் வழிபாட்டில் இருக்கின்றன.  அந்த வகையில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாய கர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் திருக்கருக்கா வூரை அடுத்த சோத்தமங்கலம் கயிலாசநாத சுவாமி கோயில்  வளாகத்தில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாய கருக்கு, விநாயகர் சதுர்த்தியன்று கிராம மக்களால் சிறப்பு  வழிபாடு நடத்தப்பட்டது. அப்பகுதியிலிருந்த பனை விதை களை சேகரித்து விநாயகரை வடிவமைத்திருந்தனர். இதில்,  பனைமரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. புதனன்று இந்தப் பனை விதைகள் ஏரிக்கரைகள் மற்றும் குளக்கரைகளில் தூவப்பட்டன.  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் செயற்கை மூலப் பொருட்களை கொண்டு, விநாயகர் சிலைகளை செய்து நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் மாசுபடுகிறது. அதற்குப் பதிலாக இதுபோன்ற இயற்கைப் பொருட்களால் செய்தால், இயற்கை வளமும், மரம் வளர்ப்பும் முன்னெடுக்கப்படும்.

குப்பையில்லா இந்தியாவை  உருவாக்கிட உறுதியேற்பு

தூத்துக்குடி,செப்.20- கோவில்பட்டியில் குப்பை இல்லா இந்தியாவை உருவாக்கிட மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.  நாடு முழுவதும் தூய்மையே சேவை இயக்கம் மூலம் குப்பையில்லா இந்தியாவை உருவாக்கிட சுகாதார முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 100க்கும்  மேற்பட்ட மாணவர்கள் குப்பையில்லா இந்தியாவை உரு வாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ராதா, சுகாதார பயிற்றுனர் முத்துமுருகன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மத்திய சிறையில் எழுத்தறிவு திட்டம் துவக்கம்

மதுரை, செப்.20-  தமிழக சிறைகளில் உள்ள எழுத படிக்க  தெரியாத சிறைவாசி களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு  எழுத்தறிவுத் திட்டம் செயல் படுத்தப்படும் என சட்டமன்றத் தில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மதுரை மத்திய சிறையில்  செவ்வாயன்று சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கப் பட்டது. விழாவில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) பரசுராமன், மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தனர்.  பயிற்சியில் மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த 77 சிறைவாசிகளும், பெண்கள் சிறையைச் சார்ந்த 30 சிறைவாசிகளும் கல்வி பயில்கின்றனர். ஆறு  மாத பயிற்சி முடிவில்  இவர்களுக்கு கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்  கப்படும். கல்வி பயிலும் சிறைவாசிகளுக்கு கற்றல்  கையேடுகள் உள்ளிட்ட உப கரணங்கள் வழங்கப்பட்டன.

நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி விசாரணை அதிகாரிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை

மதுரை, செப். 20-  மதுரையை தலைமை யிடமாக கொண்டு செயல்  பட்டு வந்த நியோமேக்ஸ் என்ற பிரபல நிதி நிறுவனம்  மூலம் பல்வேறு பெயர்களில் 20-க்கும் மேற்பட்ட கிளை நிறு வனங்களை தமிழகம் முழு வதும் உருவாக்கி பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பல  ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நெல்லை, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், இராம நாதபுரம் உள்ளிட்ட கிளை களை நிர்வகித்து வந்த 17  நிர்வாகிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சைமன் ராஜா,  கபில், பத்மநாபன் ஆகிய 5  நபருக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை கவுதமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ஒரு கோடி ரூபாய் நியோ மேக்ஸ் சில் முதலீடு செய் தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக் கில் நிலம் வாங்கி வைத்து உள்ளோம். ஒன்றிய அரசின் பெரிய திட்டங்கள் வர உள்  ளது. எனவே, இதில் இணைந்து  அதிக லாபம் பெறலாம். என  ஆசைவார்த்தை கூறினர். ஆனால் கூறியபடி பணமோ, நிலமோ ஒதுங்க வில்லை. இவர்கள் முத லீட்டாளர்களின் பணத்தை  கல்லூரிகள், வெளிநாடு களில் முதலீடு செய்து உள்ள னர். பல ஆயிரம் கோடி ரூபாய்  மோசடி நடந்து உள்ளது. தற்  போது மதுரை பொருளா தார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்டவர் களோடு, இந்த வழக்கை  விசாரிக்கும் விசாரணை அதி காரிகள் சிலர், உறுதுணை யாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்  வதில், கால தாமதமாகிறது.  எனவே, பாதிக்கப்பட்டவர் களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என  கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்  தது. அப்போது, மனுதாரர் தரப்பு, ‘‘முக்கிய குற்றவாளி களை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்  யப்பட்டவர்களில் சிலர் ஜாமீ னில் வெளி வந்து உள்ளனர்.  பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பானது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசா ரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றனர். அரசு தரப்பில் ஆஜரான  குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், முக்கிய மான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திங்களன்று 2 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம். இது வரை 5000 சொத்து ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன. புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டு உள்ளார். உரிய முடிவு எட்டப்படும்’’ என்றார். இதை தொடர்ந்து நீதி பதி, குற்றம் சாட்டப்பட்ட வர்களை விரைவாக கைது  செய்ய வேண்டும், தேவைப்  பட்டால் இந்த வழக்கை விசா ரிக்கும் பொருளாதார குற்  றப்பிரிவு, விசாரணை அதி காரிகள் தொலைபேசி தொடர்புகள் சோதனை செய்ய நேரிடும் என எச்ச ரிக்கை விடுத்தார். மேலும் வழக்கில் பிர தான குற்றவாளிகளை இது வரை ஏன் கைது செய்ய வில்லை என கேள்வி எழுப்  பிய நீதிபதி, உரிய நடவடிக்கை  எடுத்து பதில் மனு தாக்கல்  செய்ய வேண்டும் இல்லை யேல், சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும்? என கூறி  வழக்கு விசாரணையை செப் டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.