districts

img

தியாகி என்.வெங்கடாச்சலம் நினைவிடத்தில் பொங்கல் விழா

தஞ்சாவூர், ஜன.15 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு தலித்  கிறிஸ்தவ மக்கள், தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் வைக்கவும், பண்டிகை  கொண்டாடவும் சாதி வெறியர்கள் அனு மதிக்கவில்லை.  இதனால் தை மாதம் 4, 5 ஆகிய தேதி களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தனியாக  பொங்கலைக் கொண்டாடி வந்துள்ள னர். இந்நிலையில் கடந்த 60 ஆண்டு களுக்கு முன், பொதுவுடமை போராளி  தியாகி என்.வி என்ற என்.வெங்கடா சலம், இந்நிலை கண்டு, சமத்துவத்தை நிலைநாட்ட, பலத்த எதிர்ப்புகளையும் முறியடித்து, தானே முன்னின்று, “தை 1  ஆம் தேதி அன்றே ஒடுக்கப்பட்ட மக்களும் பொங்கல் வைக்கலாம்” என  முழங்கி, ஒடுக்கப்பட்ட மக்களை தை  முதல் நாளே பொங்கலிட வைத்தார். சாதி வெறியர்களின் முதுகெலும்பை முறித்து, நீண்ட காலமாக இருந்த அடி மைத்தனத்தை மாற்றி அமைத்தார்.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,  இப்பகுதி மக்கள் இராயமுண்டான்பட்டி யில் உள்ள தியாகி என்.வி நினைவிடத் தில், ஒவ்வொரு ஆண்டும், கிராமத்தின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை  செலுத்திய பின்னர் தை முதல் நாளில்  பொங்கலிடுகின்றனர்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், மற்றும் வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் தியாகி என்.வி  நினைவிடத்தில் மலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். பின்னர்  குடும்பத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்த னர்.