districts

img

திருத்துறைப்பூண்டி நகராட்சி 11 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரிக்கு வாக்குச் சேகரிப்பு

திருத்துறைப்பூண்டி, பிப்.14 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான கே.ஜி.ரகுராமனின் துணைவியார் ராமலோக ஈஸ்வரி போட்டியிடுகிறார். அவருக்கு நாடார் தெரு, அபிஷேக கட்டளை, கீழத்தெரு, காட்டு நாயக்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வாக்குச் சேகரித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் காரல் மார்க்ஸ், முன்னாள் நகர  குழு உறுப்பினர் வேதரத்தினம், நகரக் குழு  உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.