மயிலாடுதுறை அக்.12 - முதல் தமிழ் நாவலாசிரி யர், கவிஞர், எழுத்தாளர், முதல் இந்திய தமிழ் நீதிபதி, மயிலாடுதுறையின் முதல் நகர்மன்ற தலைவர் என பல்வேறு வரலாற்று அடை யாளங்களை கொண்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 197 ஆவது பிறந்தநாள் விழா புதனன்று கொண்டாடப்பட்டது. அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் அவ ரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப் பட்டது. மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் மாலை அணிவித் தார். நிகழ்ச்சிக்கு மயிலாடு துறைத் தமிழ்ச் சங்க நிறுவனர் ச.பவுல்ராஜ் தலைமை வகித்தார். தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை மாநிலத் தலைவர் பேரா சிரியர் துரை.குணசேகரன், ஏவிசி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சு.தமிழ் வேலு உள்ளிட்டோர் உரை யாற்றினர். நினைவு மண்டபம் எழுப்ப உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மயிலாடுதுறை கச்சேரி சாலையின் பெயரை “தமிழ்ச் சாலை” என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது.