districts

சேதுவராயன் குளம் தூர்வாரும் பணி தடுத்து நிறுத்தம்

அரியலூர், மே, 3 - தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி சேதுவராயன் குளத்தை தூர் வாருவதை தடுத்து நிறுத்தும் சமூக விரோதிகளை கண்டித்து, குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி வரத்து வாய்க்கால்களை சீர்  செய்து தர வேண்டும் எனக் கோரி உடை யார்பாளையம் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.  அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே  உள்ள சோழமாதேவி கிராமத்தில் சேதுவரா யன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை  தூர்வாரி கரைகளை பலப்படுத்தி வரத்து வாய்க்கால்களை சீர் செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் அந்த குளத்தை அண்ணா  மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் தூர் வருவதற் கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தூர்வா ரும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குளத்திலிருந்து மண்வெட்டி விற்பனை செய்யப்படுவதாக மர்ம நபர்கள் சிலர், போன்  செய்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  பணியை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறி  அதிகாரிகளுக்கு புரிய வைத்து மீண்டும் பணியை தொடர்வதற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.  இதற்கிடையில் மீண்டும் மர்ம நபர்கள்  அதிகாரிகளுக்கு போன் செய்து அப்பணியை  தடுத்து நிறுத்தினர். இதனால் வேதனை யடைந்த சோழமாதேவி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், வியாழனன்று திடீ ரென உடையார்பாளையம் ஊராட்சி அலுவ லகத்திற்கு சென்று, கோட்டாட்சியர் ஷீஜாவை சந்தித்தனர். அப்போது, “நீண்ட நாள் கோரிக்கையான சேதுவராயன் குளத்தை தூர்வாரும் பணியை  மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அரசிடம்  கோரிக்கை வைத்து பெற்றிருக்கிறோம். இதனை யாரோ சிலர் சுயலாபத்திற்காக அவ்வப்போது தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.  அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் போது மர்ம நபர்களின் தொலைபேசி அழைப்புக்கு முக்கியத்துவம் தராமல், அதி காரிகளே முன்னால் நின்று குளத்தை தூர்வாரி  வரத்து வாய்க்கால்களை சீரமைத்து குளத்தின்  கரைகளை பலப்படுத்தி தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.  கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட கோட்டாட்சியர் ஷீஜா,  குளத்தினை தூர்வாரும் பணியை தொ டர்ந்து செய்வதற்கு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

;