districts

img

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் தேரோட்டத் திருவிழா

தஞ்சாவூர், ஏப்.23-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் திரு விழாவையொட்டி பேராவூரணி மற்றும்  அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட  கிராமத்தினர் நீலகண்ட பிள்ளையா ருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழி பட்டனர். திங்கள்கிழமை அதிகாலை முதல் பல்வேறு காவடிகளை பக்தர்கள்  எடுத்து வந்தும், தீ மிதித்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தே ரோட்டம் திங்களன்று மாலை 5.30  மணிக்கு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வா னையுடன், உற்சவர் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்  பிடித்து இழுத்தனர்.  திருவிழாவில் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், குமரப்பா கல்விக் குழுமத் தலைவர்  முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ. இளங்கோவன், பேரூராட்சி பெருந்த லைவர் சாந்தி சேகர், திமுக நகரச்  செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக  தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தர ராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.  தேரோட்டத்தையொட்டி அனைத்து  விழா மண்டபங்களிலும் பக்தர்களுக்கு  அன்னதானம், நீர்-மோர் வழங்கப்பட்டது.  தேரோட்டத்தை காண 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்ட னர்.  திருக்கல்யாணம் - தெப்ப உற்சவம்  செவ்வாய்க்கிழமை சித்ரா பவுர்ணமி தீர்த்த திருவிழா நடைபெற்ற நிலை யில், புதன்கிழமை (ஏப்.24) காலை 10.30  மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை விடையாற்றி உற்சவம்,  மண்டலாபிஷேகம் நடக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக் காடு கிராமத்தார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

;