districts

img

பேராவூரணி அரசு மருத்துவருக்கு சிறந்த மருத்துவருக்கான விருது

தஞ்சாவூர், நவ.27- பேராவூரணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு சிறந்த மருத்துவருக்கான விருதை, சென்னை யில் நடந்த விழாவில் இளைஞர் நலம்  மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலராக, செரு வாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி ஓய்வு  பெற்றவர் மருத்துவர் வி.சௌந்தர ராஜன். இவர் தனது பணிக் காலத்தில்,  செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தை தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக மருத்துவ சேவையிலும், சுகாதாரத்திலும் முதன் மையானதாக பராமரித்து வந்தார். அப்போது செருவாவிடுதி அரசு ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டது.  மேலும் பசுமாடு, நாட்டுக் கோழி களை வளர்த்து, அதன் பால், முட்டை களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி னார். அந்த வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். இவரது  சேவையை மாவட்ட ஆட்சியர், மருத்துவத்துறை உயர் அலுவலர்கள் பாராட்டினர்.  இந்நிலையில், கடந்தாண்டு அவர்  பணி ஓய்வு பெற்றார். தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவரணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் நான்காவது  மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் டாக்டர் வி.சௌந்தர ராஜனுக்கு சிறந்த மருத்துவருக்கான விருதை வழங்கினார்.  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தர சன், சமூக சமத்துவத்திற்கான மருத்து வர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  டாக்டர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.