districts

திருச்சி முக்கிய செய்திகள்

டிச.20-இல் மக்கள்  நேர்காணல் முகாம்

பாபநாசம், டிச.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கபிஸ் தலம் சரகம், ஓலைப் பாடி கிராமத்தில் டிசம்பர்  20 அன்று மக்கள் நேர்கா ணல் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை, முகாம் நடைபெறும் நாளன்றோ அல்லது அதற்கு முன் னரோ பாபநாசம் வட்ட அலுவலகம் மற்றும் கபிஸ் தலம் சரக வருவாய் ஆய் வாளரிடம் அளிக்க வேண்டுமென பாபநா சம் வட்டாட்சியர் மணி கண்டன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

பாலின வன்முறை  எதிர்ப்பு கவிதைப் போட்டி

புதுக்கோட்டை, டிச.14 - புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாவட்ட நேரு  யுவகேந்திரா அமைப்பு களின் சார்பில் பாலின அடிப்படையிலான வன் முறை எதிர்ப்பு குறித்த கவிதைப்போட்டி புதுக் கோட்டை அன்னை சத்யா குழந்தைகள் இல்ல வளாகத்தில் புதன் கிழமை நடைபெற்றது. பரிசளிப்பு விழா விற்கு மாவட்ட குழந்தை கள் நலக் குழும தலை வர் சதாசிவம் தலைமை  வகித்தார். அன்னை சத்யா குழந்தைகள் இல்ல காப்பாளர் பர மேஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட  கவிஞர் தங்கம்மூர்த்தி, குழந்தைகள் எழுதிய கவிதைகளைப் பாராட்டிப் பேசினார். கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்ட அனை வருக்கும் நினைவுப்  பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊதியத்துடன் வார விடுப்பு வழங்க கோரிக்கை

பொன்னமராவதி, டிச.14 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதியில் மாவட்ட உள் ளாட்சித்துறை தொழி லாளர் சங்கத்தின் பொன் னமராவதி பேரூராட்சி கிளை கூட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு சாலையோர வியாபாரி கள் சங்க ஒன்றியச் செய லாளர் தீன் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் க. முகமதலி ஜின்னா சிறப்பு ரையாற்றினார். கூட்டத்தில், எட்டு மணி நேர வேலையை முறைப்படுத்த வேண் டும். பயோமெட்ரிக் முறையை கைவிட வேண் டும். ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு வழங்க  வேண்டும். பண்டிகை விடுப்பு, தேசிய விடுப்பு  நாட்களில் சம்பளத்தை பிடிக்கக் கூடாது. ஊழி யர்களை மரியாதை குறைவாக நடத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

சங்கத்தை பிரிக்கும் அலுவலரை கண்டித்து மகளிர் தையல் தொழிலாளர்கள் மனு

பெரம்பலூர், டிச.14 - சங்கத்தை பிரிக்கும் அலுவலரை கண்டித்தும், தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. அச்சங்கத்தை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கடந்த செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், “பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பெண்கள்,  அரசுப் பள்ளி சீருடை முதல் அரசு சார்ந்த துறைகளுக்கு துணிகள் தைத்துக் கொடுத்து குறைவான வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் சங்கத்திற்கு தொழில் கூட்டுறவு அலுவலராக பொறுப்பு வகிக்கும் சேதுராமன் என்பவர், தன்னிச்சையாக முடிவெடுத்து சங்கத்தை அரியலூருக்கு பிரித்து விடும் முயற்சியை மேற்கொள்கிறார். இரண்டு மாவட்ட துணிகளையும் ஒருங்கிணைத்து தைக்கும் போது அனைத்து உறுப்பினர்களுக்கும் வேலை இருக்கும். இப்படிப்பட்ட நிலையில், சங்கத்தை பிரித்தால் குழப்பம் ஏற்பட்டு இரண்டு மாவட்ட உறுப்பினர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். இதுகுறித்து ஏற்கனவே பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சியர் அவர்கள், இதில் உரிய நடவடிக்கை எடுத்து சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்
கும்பகோணத்தில் இன்று செம்படைப் பேரணி

சிபிஎம் அழைப்பு கும்பகோணம், டிச.14 - சிபிஎம் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவ ரான தோழர் பி.ராமமூர்த்தியின் 36 ஆவது  நினைவு தினத்தை முன்னிட்டு, வெள்ளி யன்று (டிச.15) மாலை தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் செம்படை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தொழிற்சங்க (சிஐடியு) ஸ்தாபக தலைவரும்  விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் பி.ராமமூர்த்தியின் 36 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, கும்ப கோணம் கும்பேஸ்வரர் கோயிலிருந்து மீன் மார்க்கெட் வரை செம்படை பேரணியும், 6  மணிக்கு மீன் மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. பொதுக்  கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி பங்கேற்கிறார். முன்னதாக காலை 9.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடை மருதூர்  அலுவலகமான பி.ஆர்.நினைவ ரங்கத்தில், தோழர் பி.ஆர்.வெண்கல  உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படு கிறது. பின்னர், தோழர் பி.ஆர். பிறந்த ஊரான வேப்பத்தூர் கிராமத்தில் உள்ள அவ ரது நினைவிடத்தில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள் ளார்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்தாததால்  9 பேரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.14 - திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு, அதனை செலுத்த உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. கால அவகாசம் கொடுக்கப்பட்டும் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநக ராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவிட்டார்.  அதன்படி, மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சிப்  பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டி டங்கள் மற்றும் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த வகையில்  மொத்தம் 9 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட் டது. மேலும், 190 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 15  நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும்  கட்டணம் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்ப டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு 31.3. 2024 வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநக ராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி என்ஐடியில் இளம் சாதனையாளர்களுக்கு விருது

திருச்சிராப்பள்ளி, டிச.14 - திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும் கல்வி, தொழிற் சாலை, ஆராய்ச்சி மையம், காவல் உள்ளிட்ட பல துறைகளில்  சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாத னையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி என்ஐடி இயக்குநர் அகிலா தலைமையில் நடைபெற்றது. டாடா சன்ஸ் நிறுவன இயக்குநர் பாஸ்கர்பட், பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் என்ஐடி முன்னாள் மாண வர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி னார்.  பின்னர் அவர் பேசுகையில், “இந்தியாவில் உள்ள என்ஐடிகளில் முதலிடத்தில் இருக்கும் திருச்சி என்ஐடியில் படித்த பலர் உலகெங்கும் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட பல துறை களிலும் என்ஐடி சிறந்து விளங்குகிறது. ஆசிரியர்கள், மாண வர்கள், பணியாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சிதான் இத்தகைய சிறப்புக்கு காரணம்.  முன்னாள் மாணவர்கள் தங்களின் திறமை மற்றும் அனுபவங்களை இளம் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள  வேண்டும். மக்கள்தொகை மட்டுமின்றி இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் உள்ள 148 விமான நிலையங்கள் மூலமாக அதிகளவில் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகள் நடை பெறுகின்றன.  சந்திரயான்–3 விண்கலம் நிலவில் இறங்கி பரிசோ தனை மேற்கொண்டதை 8.06 மில்லியன் மக்கள் பார்த்து  மகிழ்ந்தனர். பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலைமை உயர்ந்துள்ளது” என்றார். இந்நிகழ்ச்சியில் என்ஐடி முன்னாள் மாணவர் சங்க தலை வர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் ஆதார் முகாம்

தஞ்சாவூர், டிச.14 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வார நாள்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இதுகுறித்து பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கை யில், பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள, பட்டுக் கோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகத்தில் டிச.14 முதல் அனைத்து வேலை நாள்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உள்பட) காலை 8 மணி முதல்  இரவு 8 மணி வரை ஆதார் சேவை வழங்கப்பட உள்ளது.  மேலும் அதிராம்பட்டினம், ஆலத்தூர், ஆயக்காரன் புலம், கரியாப்பட்டினம், கோட்டைத்தெரு, குன்னலூர், குருவிக் கரம்பை, மதுக்கூர், மேலஉளூர், முத்துப்பேட்டை, நாடி முத்துநகர், ஒரத்தநாடு, ஒட்டங்காடு, பாமணி, பாப்பாநாடு, பேராவூரணி, தகட்டூர், தலைஞாயிறு, தாமரங்கோட்டை, திருச் சிற்றம்பலம், தோப்புத்துறை, வடசேரி, வேதாரண்யம், விளக்குடி துணை அஞ்சல் அலுவலகங்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் சேவை  நடைபெற்று வருகிறது. இச்சேவைகளுக்கு அருகில் உள்ள  அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம்” என கூறப்பட்டுள் ளது. 

கேஎப்சி கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ரூ.66.20 லட்சம் மோசடி  கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் கைது

அரியலூர், டிச.14- அரியலூரில் கேஎப்சி கிளை தொடங்குவதற்கு அனுமதி தருவதாகக் கூறி ரூ.66.20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கர்நா டகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் இராஜாஜி நகர், கீரைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (47). இவர் அரியலூரில் கேஎப்சி கிளை தொடங்குவதற்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கொளஞ்சிநாதனை தொடர்புக் கொண்டவர்கள், இந்த கிளையை தொடங்குவதற்கு முன்தொகை மற்றும் தடை யில்லா சான்று, பதிவுச் சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை  பல்வேறு தவணைகளில் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ள னர். இதுகுறித்து கொளஞ்சிநாதன், இணைய குற்ற காவல்  தொடர்பு எண் 1930-ஐ அணுகி புகார் அளித்தார். அதன்பே ரில், கொளஞ்சிநாதன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.6.03  லட்சம் முடக்கப்பட்டது. பின்னர், இணைய குற்றக் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பி.வாணி தலைமையிலான 9  பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொளஞ்சிநாதனை ஏமாற்றி பணத்தை  பறித்தது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் (39) மற்றும் தருண் (21) உள்ளிட்ட சிலர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் சிறப்பு குழுவினர் கர்நாடகம் சென்று அவர்களை புதன்கிழமை கைது செய்தனர். அவர் களிடமிருந்து 2 கைப்பேசிகள், 4 சிம் கார்டுகள், 4 வங்கி கணக்குப் புத்தகம், 5 காசோலை புத்தகம், 5 ஏடிஎம் கார்டு கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக் கில் தலைமறைவாக உள்ள பீகாரைச் சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர்.

டிச.16-இல் தா.பழூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர், டிச.14- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் சனிக்கிழமை (டிச.16) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 18 முதல் 45 வயது வரையிலான 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள், தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் என பங்கேற்கலாம். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பதிவு செய்யப்படும். சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சுயதொழில் உருவாக்கும் திட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். தேசிய அளவிலான தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம், தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம், தமிழ்நாடு தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை முகாம், அயல்நாட்டு வேலை வாய்ப்புகளுக்கான ஆலோசனை முகாம் உள்ளிட்ட முகாம்களும் நடத்தப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04329–228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.